மலேசிய இந்திய தொழில்முனைவர் கூட்டுறவு கழகம்,

செனட் ஏற்பாட்டில் இளம் தொழில்முனைவர் விருதளிப்பு விழா ! இளைஞர்கள் விண்ணப்பங்கள் அனுப்பலாம் ! 

செனட் தலைவர் மதுமாரிமுத்து அழைப்பு !  
( குணாளன் மணியம் )

   மலேசிய இந்திய தொழில்முனைவர் கூட்டுறவுக் கழகம் இளம் தொழில் முனைவ ர்களின் மேம்பாட்டிற்காக கடந்த 2010இல் அமைக்கப்பட்டது. இந்த கூட்டுறவுக்

கழகத்தின் வழி அதிகமான இளம் தொழில் முனைவர்கள் உருவாக்கப்பட்டிருக்கி றார்கள். இத்தகைய தொழில் முனைவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக செனட் எனப்படும் சமூக தொழில்முனைவர் நெட்வொர்க் ஒத்துழைப்பில் ஆண்டு தோறும் விருதளிப்பு விழா நடத்தப்பட்டு  வருவதாக அண்மையில் கோலாலம்பூரில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற விருதளிப்பு அறிமுக நிகழ்வில் மதுமாரிமுத்து தெரிவித்தார்.

இளம் தொழில் முனைவர்கள் தங்கள் விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 
 

EXECUTIVE SECRETARY MIEC, 
SUITE 10-18, 10TH FLOOR, MENARA TKSS,
NO.206, JALAN SEGAMBUT
51200 KUALA LUMPUR.
EMAIL: secretary@kuimb.com
WEBSITE: wwe.kuimb.com
TEL: 010-400 2455

கோலாலம்பூர், ஆகஸ்டு - 23


   மலேசிய இந்திய இளைஞர்கள் தொழில்துறையில் இளம் தொழில்முனைவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற நல்நோக்கத்தில் மலேசிய இந்திய தொழில்முனைவர் கூட்டுறவு கழகம், செனட் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும்  இளம் தொழில்முனைவர் விருதளிப்பு விழாவிற்காக இளம் தொழில்முனைவர்கள்  விண்ணப்பங்களை அனுப்பி வைக்க அழைக்கப்படுவதாக செனட் தலைவர் மதுமாரிமுத்து கூறினார்.

"Sowmyan"

​Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu. India.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

   இந்த பெர்டானா இளம்தொழில் முனைவர் விருதளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த இளம் தொழில் முனைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வுள்ளன. இந்த விருதுதளிப்பு கடந்த 2005இல் தொடங்கப்பட்டு 12ஆவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த விருதளிப்பில் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட இளம் தொழில் முனைவர்கள் தங்கள் வெற்றியின் ரகசியங்களை விருது விழாவில் பகிர்ந்து கொள்ளலாம். இளம் தொழில் முனைவர்களுக்கான விருதுகள் நிறுவன வளர்ச்சி, நிதிவளம், வர்த்தக மேம்பாடு, எதிர்நோக்கிய சவால்கள், வெற்றியின் ரகசியம், சமூக சேவை, தலைமைத்துவ திறன் ஆகிய தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு விருதுகள் வழங்கப்படுவதால் தகுதி வாய்ந்த இளம் தொழில் முனைவர்கள் தங்கள் விண்ணப்பங்களை விரைந்து அனுப்பி வைக்கும்படி மதுமாரிமுத்து கேட்டுக் கொண்டார். 

 Advertisement :

   இந்த விண்ணப்பங்களை சிறப்பு நீதிபதிகள் குழு நன்கு ஆராய்ந்து, போட்டியாள

ர்களை நேர்காணல் செய்து தகுதியானவர்களை விருதுக்கு தேர்வு செய்வார்கள் என்று மதுமாரிமுத்து சொன்னார்.  இந்த இளம் தொழில் முனைவர் விருதளிப்பு விழா

எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுவதை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் இந்த அறிமுக விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார். இளம் தொழில் முனைவ

ர்களை உருவாக்கும் செனட் முயற்சியை டாக்டர் சுப்பிரமணியம் பாராட்டினார்.

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

www.valaisiddar.com

 Advertisement :