Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

MOB : +91-9500477739

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

கோலாலம்பூர், மே - 01
           

   ஆஸ்ட்ரோ விண்மீன் முழுக்க முழுக்க மலேசியக் கலைஞர்கள் அலைவரிசையாக திகழும் என்று டாக்டர் ராஜாமணி அறிவித்திருந்ததாக நம்பப்படும் வேளையில் அது தற்போது ஆங்கில மொழி அலைவரிசையாக உருவெடுத்துள்ளது கண்டு இந்திய சமுதாயம் அதிர்ச்சியடைந்துள்ளது.             

  சித்தர்களின் தெய்வீக​​ ரசமணிகள்

 Advertisement :

   ஆஸ்ட்ரோ நிறுவனம் இந்தியர்களுக்கு பல அலைவரிசைகளை ஏற்படுத்தித் தந்துள்ளதை பாராட்ட வேண்டும். ஆனால், அந்த அலைவரிசைகளை டாக்டர் ராஜாமணி இந்திய நிகழ்ச்சிகளை ஒளியேற்றி தவறாக கையாண்டு வருவதாக தெரிகிறது. எங்கள் அதிருப்தி ஆஸ்ட்ரோ நிறுவனம் மீது அல்ல. மாறாக டாக்டர் ராஜாமணி மீதுதான். அவர் ஆஸ்ட்ரோ இந்திய அலைவரிசை குழுமத் தலைவராக இருக்கும் வரையில் இந்திய சமுதாயத்திற்கு சாபக்கேடுதான். தமிழ்நாட்டு நாடகக் குப்பைகளை தொடர்ந்து இங்கு கொட்டிக் கொண்டுதான் இருப்பார். அவரை ஆஸ்ட்ரோ நிறுவனம் உடனடியாக நீக்க வேண்டும் என்று இந்திய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


   மலேசியக் கலைஞர்களின் வாயை அடைப்பதற்கு டாக்டர் ராஜாமணி குறிப்பிட்டவர்களுக்கு நிகழ்ச்சிகளில் 

   ஆஸ்ட்ரோவில் இந்தியர்கள் அதிகமாக சந்தாதாரர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் விண்மீன் 231 அலைவரிசை முழுக்க முழுக்க மலேசியக் கலைஞர்கள் அலைவரிசையாக திகழும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று அது ஆங்கில மொழி அலைவரிசையாகவும் தமிழ்நாட்டு மாடல் அழகிகள் நிகழ்ச்சிகள் ஒளியேறும் அலைவரிசையாக விண்மீன் இருந்து வருவது இந்தியர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டு ள்ளதாக உணர்ந்துள்ளதாக மக்கள் பலர் தெரிவித்தனர்.

   இதுதொடர்பில் தேசம் வலைத்தளத்திற்கு கைப்பேசியில் அழைத்த ஆஸட்ரோ பணியாளர் ஒருவர் "இந்திய சமுதாய மக்கள்" நாடகங்களை மட்டுமே விரும்பி பார்ப்பதாகவும் அதனால்தான் நாடகங்கள் அதிகம் ஒளியேற்றப்படுவதாக கூறியிருந்தார். இதுகுறித்து கருத்துரைத்த இந்திய சமுதாய மக்கள் ஆஸ்ட்ரோ இந்திய அலைரிசைகள் அத்தனையும் துண்டித்து விட்டால் அப்படி சொல்வார்களா? 


   பிறகு எப்படி அதிகமான சந்தாதாரர்கள் ஆஸ்ட்ரோவுக்கு கிடைப்பார்கள்? டாக்டர் ராஜாமணி செய்யும் தவறுகளை மூடி மறைப்பதற்கு மக்கள் மீது பழி போடுவது நியாயமில்லை. ஆஸ்ட்ரோ இந்திய அலைவரிசைகளில் தரமான மலேசிய கலைஞர்கள் நிகழ்ச்சிகள் ஒளியேற வேண்டுமானால் ஆஸ்ட்ரோ நிறுவனம் டாக்டர் ராஜாமணியை அகற்ற வேண்டும் என்று இந்திய சமுதாய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாட்டி வைத்தியம் குணா...

மலேசியா: +6-0162103433

 For More Details Please Click Here :

ஆஸ்ட்ரோ விண்மீன்  ஆங்கில அலைவரிசையாக மாறியது எப்போது?
டாக்டர் ராஜாமணி பதில் சொல்வாரா?
( குணாளன் மணியம் )

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

MOB : +6-0165214985

வாய்ப்பு தருவதாகவும் நம்பப்படுகிறது. ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் மலேசிய கலைஞர்களுக்கு வாய்ப்பு அறவே இல்லை என்பதுதான் உண்மை. பெயருக்கு மலேசியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை ஒளியேற்றிவிட்டு கலைஞர்களையும் மக்களையும் ராஜாமணி ஏமாற்றுவதாக தெரியவந்துள்ளது.