அருட்பெரும் ஜோதி தயவு இல்லம் ஏற்பாட்டில் ,சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளின் ஜெயந்தி விழா நடைபெற்றது.

​- வீர அபிமன்யூ

பட்டர் வெர்த், 11-10-2017


    பட்டர் வெர்த், செபராங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள அருட்பெரும் ஜோதி தயவு இல்லத்தின் ஏற்பாட்டில் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளின் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.சகல ஜீவர்களிடத்தும் அன்பு பூண்டு அதற்க்கு தீங்கு இழக்காமல் வாழ வேண்டும் என்ற உயரிய கருத்து நாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து போதிலும்,அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான வடிவம் தந்தவர்தான் அருட் பிரகாச வள்ளலார் ஸ்ரீ இராமலிங்க அடிகளார். சிவத்திரு குரு அவர்களின் விடா முயற்ச்சியால் பினாங்கு மாநிலத்தில் சுவாமிகளின் ஜெயந்தி விழா கடந்த 25 ஆண்டுகாலமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

   அவர் உரையாற்றிய போது ஜீவ கரூண்யமே கடவுள் வழிபாடு என்றும்,உயிர்களின் தன்னுயிர் நேசித்தல் மற்றவர்களின் துன்பத்தை நீக்குதல், ஏழைகளின் பசி தவிர்த்தல்,போன்ற நற்க் காரியங்களை தான் இறையருளை பெற்று தரும் என்று

சிவ ஸ்ரீ அ.நா.தினேஷ்வர்மன் குருக்களின் எடுத்துரைத்தார்.சன்மார்க்க நெறிகளையும்,இராமலிங்க சுவாமிகளின் பெருமையினையும் நாம் அனைவரும்

அறிந்து வாழவேண்டும் என்று அருட்பெரும் ஜோதி தயவு இல்லத்தின் ஸ்தாபகர் ஐயா சிவத்திரு குரு கூறினார். அதன் பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். 

   இந்த ஆண்டு சுவாமிகளின் ஜெயந்தி விழா சென்ற ஆண்டை போன்று கோலாகலமாக செபராங் ஜெயா வட்டாரத்தில் அமைந்துள்ள தயவு இல்லத்தில் குரு அருளோடு நடைபெற்றது.அன்றைய தினம் அதிகாலை 5.30 மணியளவில் திருஅருட்பாராயணம், அருட் பெரும் ஜோதி மகா மந்திரங்களுடன் நடத்தப்பட்டது. பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் அகவல் பாராயணம்,மகா மந்திரத் ஜெபத்துடன் ஜோதி வழிபாடு நடைபற்றது.அதனை தொடர்ந்து கலந்து கொண்ட மெய்யன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.மாலை 6.00 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்தபின்னர் ஆன்மீக சொற்பொழிவாளர் சிவ.ஸ்ரீ.அ.நா.தினேஷ்வர்மன் குருக்களின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.