ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. 524 பள்ளிக்கூடங்க ளாக இருக்கின்ற தமிழ்ப்பள்ளிக்கூடங்களை தேசிய முன்னனியின் ஆட்சி 525ஆக அதிகரித்துள்ளது. இதில் கம்பீரத் தோற்றத்துடன் 2 கோடியே 20 லட்சம் வெள்ளி  செலவில் கட்டப்பட்டு  வரும் தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை பார்த்தாலே நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்று எதிர்கட்சித் தலைவர்களுக்கு புரிந்திருக்கும். 

 For Advertisement : +6-0165214985

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

   கடந்த 2012-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட செரண்டா தமிழ்ப்பள்ளி ஏன் இன்னும் கட்டப்படவில்லை என்றும் இப்பள்ளி கட்டப்படவிருக்கும் நிலம் சரியானதாக இல்லை என்றும் சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் சாடியிருந்தார்.  செரண்டா தமிழ்ப்பள்ளிக்கூடத்தின் கட்டுமானப்பணி செவ்வனே நடப்பதற்கு பல்வேறு வகையில் நான் கல்வி அமைச்சின் மூலம் முயற்சித்து வருகி றேன்.  இத்தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிக்காக கல்வி அமைச்சு 64 லட்சத்து

34 ஆயிரம் வெள்ளியை  ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் நான் கல்வி அமைச்சோடு இணைந்து இப்பள்ளிக்கூடத்திற்கான சாலையை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தேன். கல்வி அமைச்சு வழங்கிய 5 லட்சம் வெள்ளி மான்யத்தில் பொதுப்பணி த்துறை பள்ளிச் சாலையை கட்டிக் கொடுத்ததாக கமலநாதன் சொன்னார்.

திரு. குணராஜ்

   இப்பள்ளிக்கூட கட்டுமானப்பணி அடுத்தக் கட்டத்துக்கு நகர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்கிக் கொண்டிரு

க்கும் உலு சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி மன்றம் வழங்கிய பணி நிறுத்தக் கடிதமே காரணம் என்று கமலநாதன் குற்றஞ்சாட்டி யுள்ளார். 


   இப்பள்ளிக்கூட கட்டுமானப்பணியில் அதிக அக்கறை கொண்டிருக்கும்  

ஶ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.  இப்பள்ளிக்கூடம் கட்டாமல் இருப்பதற்கு  சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒரு காரணம். உலு சிலாங்கூர் ஊராட்சி மன்றம் வழங்கியுள்ள கடிதத்தை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டியது சிலாங்கூர் மாநில அரசாங்கமே. அதை விடுத்து பள்ளிக்கூடத்தினைக் கட்டி முடிக்கவில்லை என மற்றவர்களைச்சா டுவது தேவையில்லாத செயலாகும் என்று கமலநாதன் தெளிவுபடுத்தினார்.

 Advertisement :

 ரவாங் ஏப்ரல் - 23

   
   செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தி ற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்று தேசம் வலைத்தளம் எழுப்பிய  கேள்விக்கு கல்வி துணையமைச்சர்

டத்தோ ப.கமலநாதன் பதிலளித்துள்ளார்.

   இப்பள்ளிக்காக தேசிய மின்சார வாரியமான டிஎன்பியிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை வழங்கி மின்சார தூண்களை உயர்த்துவதற்கும் ஏற்பாடு செய்தேன். மின்சார தூண்கள் உயரமாக பொருத்தப்பட்டதால் கனரக வாகனங்களும் இச்சாலையை உபயோகிக்க முடியும். இவை அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து இருக்கின்றேன். இதற்கிடையில் பலரும் பள்ளி கட்டுமானம் தொடங்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.    

நாடாளுமன்ற தொகுதியிலுள்ள பள்ளிகளை ஒருபோதும் கைவிடமாட்டேன். செராண்டா தமிழ்பள்ளிக்கு தடையாக இருப்பது யார் என்பதை தெளிவாகச் சொல்லி விட்டேன். எனினும் செராண்டா தமிழ்ப்பள்ளிக்கு யார் தடையாக இருந்தாலும் அப்பள்ளியை கண்டிப்பாக கட்டி முடிப்பேன் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டத்தோ கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

டத்தோ கமலநாதன்

செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம்! உலுசிலாங்கூர் மாநகராட்சி மன்றம் வழங்கிய பணி நிறுத்தக் கடிதமே கட்டுமானத்திற்கு தடையாக உள்ளது! தேசம் வலைத்தள செய்திக்கு டத்தோ கமலநாதன் பதில்... ( குணாளன் மணியம் )

   கடந்த ஏழு ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்து கொண்டிருக்கும் செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானத்திற்கு உலுசிலாங்கூர் ஊராட்சி மன்றமே காரணம். பள்ளி கட்டுமானத்தை நிறுத்தம் செய்வதற்கு அவர்கள் வெளியிட்ட கடிதமே தடையாக இருப்பதாக டத்தோ  கமலநாதன் பதில் கூறியுள்ளார்.


   செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம் குறித்து டத்தோ கமலநாதன் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார், கெஅடிலான் கட்சியின் செலாயாங் தொகுதி துணைத்தலைவர் குணராஜ் இருவரும் எழுப்பிய கேள்வியை தேசம் வலைத்தளம் அண்மையில் செய்தியாக வெளியிட்டிரு ந்தது. அந்த செய்திக்கு டத்தோ ப.கமலநாதன் பதிலளித்துள்ளார். 

திரு.  சேவியர் ஜெயகுமார்

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

   இப்பள்ளிக்கூடத்தை சிலாங்கூரில் அதுவும் சேவியரின் சட்டமன்ற இடத்திலேயே கட்டிக் கொண்டிருக்கி ன்றோம் என்பதனை அவர் மறக்கக் கூடாது.  அது மட்டுமின்றி 2 கோடியே

10 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி  செலவில் கட்டப்பட்டு வரும் பண்டார் மக்கோத்தா புதிய தமிழ்ப்பள்ளியையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்ப்பள்ளிகளை முடிந்த வரையில் நான் கண்கானித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 


   இப்படி மற்ற இடங்களில் தமிழ்ப்பள்ளிக ளைக் கட்டிக் கொண்டிருக்கும் நான் எனது