1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

என்று வட்டார மஇகா தலைவர்கள், வட்டார மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது தேசம் வலைத்தள ஊடகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில் எதிர்க்கட்சி சார்பில் இந்தியர் போட்டியிடப் போவதாக தெரிகிறது. மஇகா உள்ளூர் வேட்பாளரை தேர்வு செய்யத் தவறினால்  இந்தியர்கள் எதிர்க்கட்சி இந்திய வேட்பாளருக்கு வாக்காளித்து அவரை வெற்றி பெறச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்ப டுவதால் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் ஈஜோக் சட்டமன்ற தொகுதிக்கு புதிய வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் 

ஈஜோக் சட்டமன்ற தொகுதியில் உள்ளூர் வேட்பாளர் போட்டியிட வேண்டும் !
பார்த்திபன் போட்டியிட்டால் மஇகா தோல்வி உறுதி !
( பாகுபலி )

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

"Sowmyan"

​Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

   ஈஜோக் தொகுதி மஇகா தலைவர்கள் பார்த்திபன் போட்டியிடுவதை விரும்பவில்லை. ஆனால், அதனை வெளிப்படையாக வெளியே சொல்ல முடியவில்லை. தேசியத் தலைவர் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனித்து நடவடிக்கை எடுக்கக் கூடாது. பார்த்திபனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக மஇகாவை பலிகடா ஆக்கக்கூடாது. ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில்  பார்த்திபன் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர். இதனை டாக்டர் சுப்பிரமணியம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் ஈஜோக் சட்டமன்ற தொகுதியில் பார்த்திபன் போட்டியிட கட்சித் தலைமை முடிவு செய்தால் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் மகஜர் வழங்கப் போவதாக வட்டார மஇகா தலைவர்களும் வட்டார மக்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

   ஈஜோக் சட்டமன்ற தொகுதியில் கிட்டத்தட்ட

5 ஆயிரம் இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். மலாக்காரர்கள் வாக்குகளை வைத்து வெற்றி  பெற்று விடலாம் என்று பார்த்திபன் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஆனால், அவரது வெற்றியை நிர்ணயம் செய்வது இந்தியர்கள் ஓட்டுதான் என்பதை பார்த்திபன் மறந்து

விட்டார் என்று இந்திய வாக்காளர்கள் எச்சரித்துள்ளனர்.
         

   ஈஜோக் சட்டமன்றத் தேர்தலில் மஇகா வெற்றி பெற வேண்டுமானால் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் புதிய வட்டார இந்திய வேட்பாளரை நிறுத்த வேண்டும். இல்லா விட்டால் மஇகா தோல்வி காண்பது உறுதி என்று வட்டார மஇகா பிரமுகர்களே குறிப்பிட்டுள்ளனர்.

 Advertisement :

பத்தாங் பெர்ஜூந்தை,  ஜூன் - 10


   ஈஜோக் சட்டமன்ற தொகுதியில் பார்த்திபன் போட்டியிட்டால் மஇகா தோற்பது உறுதி என்று தேசம் வலைத்தள ஊடகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

     

    ஈஜோக் சட்டமன்ற தொகுதியில் நடந்த  இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி கண்ட பார்த்திபன் வட்டார மக்களுக்கு எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றும் இதன் காரணமாகவே பொதுத்தேர்தலில் தோல்வி கண்டுள்ளார் என்றும் வட்டார மக்கள்  

சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.       

   ஒரு ஆசிரியரான பார்த்திபன் தோல்வி கண்ட பிறகு ஈஜோக் சட்டமன்ற தொகுதிக்கு இனிமேல் வரமாட்டேன் என்று சபதம் செய்து அதன் பிறகு ஈஜோக் தொகுதிக்கு வரவே இல்லை. பொதுவாகவே  ஒரு சட்டமன்றதொகுதியில் தோல்வி கண்டவர்கள் மறுதேர்தல் வரையில் சேவை மையத்தை அமைத்து தொகுதி ஒருங்கிணைப்பாளராக இருப்பார்கள். ஆனால், பார்த்திபன் கடந்த நான்கு ஆண்டுகள் தொகுதி பக்கமே வரவில்லை. இப்போது திடீரென்று ஈஜோக் சட்டமன்ற தொகுதிக்கு வந்துள்ளார். இங்கு போட்டியிட்டால் பார்த்திபன் தோற்பது உறுதி என்று பலர் தேசம் வலைத்தள ஊடகத்திடம் கருத்து தெரிவித்தனர்.