இந்த தேசம் அறவாரியம் அதன் இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இந்தியர்கள் அதிகம் வாழும் நாட்டில் தொங்கப்படவுள்ள தேசம் அறவாரியம் இந்தியாவுடனான உறவை வலுப்பெறச் செய்யும் என்று தேசம் அறவாரியத்தின் இந்தியத் தலைவர் டாக்டர் சீனிவாசன் குறிப்பிட்டார்.


        இந்த தேசம் அறவாரியம் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும். தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கு குறிப்பாக மேல்படிப்புக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று தொடக்க விழாவில் தேசம் துணையாசிரியரும் இந்திய கிளையின் தலைவருமான டாக்டர் சீனிவாசன் சொன்னார்.


   மலேசிய- இந்திய தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தளத்தின் ஏற்பாட்டில் கடந்த

மே 21இல் திருவண்ணாமலையில் நடந்த தேசம் விருது விழாவில்

"தேசம் அறவாரியம்" அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதனை மலேசிய இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மலேசிய-இந்திய மக்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   இந்த தேசம் அறவாரியம் முதல் கட்டமாக தென்னிந்தியா, தமிழ்நாடு திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இந்திய தேசம் துணையாசிரியர் டாக்டர் எல். சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் தொடக்க விழாவின் போது தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தள ஊடகத்தின் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் தெரிவித்தார்.


​   தேசம் அறவாரியம் தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் தொடங்கப்படவுள்ளது. இந்த தேசம் அறவாரியம் அந்தந்த நாடுகளில் உள்ள ஏழை இந்திய சமுதாய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் என்று குணாளன் மணியம் சொன்னார்.

திருவண்ணாமலையில்

தேசம் அறவாரியம்

(DESAM FOUNDATION) தொடங்கப்பட்டது!
மலேசியத் துணையமைச்சர்
டத்தோ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!
 
( செந்தில்குமரன் )

திருவண்ணாமலை, மே - 28


          நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் தேசம் தன் வரலாற்றை பதிவு செய்துள்ளது. மக்கள் நலனுக்காக குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தேசம் அறவாரியம் (DESAM FOUNDATION) தொடங்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் குணாளன் மணியம் கூறினார்.
        

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்