மேலும் விபரங்களுக்கு ...

பாட்டி வைத்தியம் குணா...

மலேசியா: +6-0162103433

​  சித்தர்களின் ஆசியால் வாழ்வை வளமாக்கும்     ரசலிங்கம் மற்றும் ரசமணிகள்

 Advertisement :

செராண்டா, மே - 29


   பிரதமர் துறையின் கீழ் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் செயல்பட்டு வரும் குழு "தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு' இலக்கை முன்வைத்து செயல்பட்டு வரும் வேளையில்  செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம் அந்த இலக்கை குழிதோண்டி புதைக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாக செராண்டா தமிழ்ப்பள்ளி மீட்புக்குழுத் தலைவர் ஜீவா கூறியுள்ளார். 


   கல்வி அமைச்சில் ஒரு துணையமைச்சராக பதவி வகித்து வரும் டத்தோ ப.கமலநாதன் செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் தன் அதிகாரத்தை இழந்து தமிழ்மொழி அழிவுக்கு துணை போகிறார் என்று செராண்டாவில் பெற்றோர்கள் நடத்திய போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் ஜீவா கூறினார்.

"Sowmyan"

​Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head 

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam News Paper & Online Channel
Malaysia.

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

"தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு" இலக்கை குழிதோண்டி புதைக்கும் செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம்!
கல்வி துணையமைச்சர் தமிழ்மொழி அழிவுக்கு துணை போகிறாரா? தமிழ்ப்பள்ளி மீட்புக்குழுத்  தலைவர் ஜீவா கேள்வி...   
( பாகுபலி )

   செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் கடந்தாண்டு முற்றுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், 6 ஆறு ஆண்டுகள் இழுபறி நிலையில் இருந்து வருகிறது. இப்பள்ளிக்கு டத்தோ கமலநாதன்தான் முழு பொறுப்பு. இதுவரையில் ஒரு முறைக்கூட பெற்றோர்களைச் சந்தித்து விளக்கம் சொல்லவில்லை. அவரது உதவியாளர்கள் கட்டுமானப் பகுதியில் காணொளி மட்டும் தயாரித்து இணையத்தளம், முகநூலில் வெளியிடுவார்கள். ஆனால், பெற்றோர்களை கமலநாதன் சந்திக்க மாட்டார் என்று செராண்டா தமிழ்ப்பள்ளி மீட்புக்குழுவைச் சேரந்த ஆர்.பி.முருகன் தெரிவித்தார்.

   செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தில் பலரும் அரசியல் நடத்துகிறார்கள். எது எப்படி இருந்தாலும் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்திற்கு கல்வி அமைச்சில் இருக்கும் டத்தோ ப.கமலநாதன்தான் பொறுப்பு. கல்வி துணையமைச்சர் என்ற வகையில் பெற்றோர்களுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். 


   இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் துறையிடம் ஒரு மகஜர் வழங்கியிருந்தோம். அந்த மகஜரை பெற்றுக் கொண்ட அதிகாரி செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானத்திற்கு தடையாக இருப்பது என்ன என்பதை விளக்கிக் கூறி விட்டார். ஆகையால், இப்பிரச்சினைக்கு முழுக்க முழுக்க டத்தோ கமலநாதன்தான் பொறுப்பு. தமிழ்ப்பள்ளியை கட்டி முடிக்க வேண்டிய கடப்பாடு கமலநாதனுக்கு இருக்கிறது. 

   நாங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகாலையில் எழுந்து பிள்ளைகளை அருகில் உள்ள ரவாங், சுங்கை சோ தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வருகிறோம். நாங்கள் நினைத்தால் பிள்ளைகளை செராண்டாவில் உள்ள மலாய் பள்ளிக்கு அனுப்ப முடியும். ஆனால், தமிழ்ப்பள்ளிக்கு முக்கியத்துவம் வழங்கும் செராண்டா பெற்றோர்களுக்கு கமலநாதன் மதிப்பளிக்கவில்லை என்று ஜீவா தெரிவித்தார்.

   செராண்டா தமிழ்ப்பள்ளி ஏன் கட்டப்படவில்லை என்று கமலநாதனிடம் மட்டுமே கேட்க முடியும். பள்ளி கட்டுமானத்திற்கு கமலநாதன் என்ன சொல்லப் போகிறார்? தேசிய முன்னணி அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நல்லதொரு பதில் சொல்ல வேண்டும் என்று முருகன் வலியுறுத்தினார்.
       

   இந்த அமைதி போராட்டத்தில் செராண்டா வட்டாரத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டனர்.

   செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தில் தனக்கு அதிகாரம் இல்லை என்பதை நிரூபித்து விட்ட கல்வி அமைச்சில் ஒரு துணையமைச்சராக இருக்கும் கமலநாதன் இரண்டு முறை அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி விட்டார். இப்பள்ளி கட்டுமானத்திற்கு கிட்டத்தட்ட 63 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கமலநாதனே அறிவிப்பு செய்திருந்தார். கடந்தாண்டு நாங்கள் நடத்திய போராட்டத்தின் பலனாக பள்ளி நிலத்தில் அடித்தளம் அமைக்க இரும்பு தூண்கள் ஊனப்பட்டன. பள்ளிக்கு ஆற்றைக் கடந்து செல்ல பாலம் அமைக்கப்பட்டது. இதற்காக குத்தகையாளரிடம் 5 லட்சம் வெள்ளிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் இரண்டு முறை நடத்தப்பட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கும் பணம் செலவிடப்பட்டுள்ளது. செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானத்திற்கு பணம் வெறியேறியுள்ள நிலையில் கட்டுமானம் நின்று போனது ஏன் என்று ஜீவா கேள்வி எழுப்பினார்.

   இப்பள்ளி கட்டுமானத்தை ஆறு ஆண்டுகள் இழுபறி செய்து விட்ட கல்வி துணையமைச்சர் ப.கமலநாதன் பள்ளிக்கான பாலம் அமைப்பதற்கும் இரண்டு முறை அடிக்கல் நடத்துவதற்கும் பணத்தை செலவிட்டுள்ளார். அப்போது அவர் எந்த நீதி ஒதிக்கீட்டை பயன்படுத்தினார்? குத்தகையாளருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது என்றால் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தில் பிரச்சினை இல்லை என்றுதான் அர்த்தம். ஆனால் தற்போது கட்டுமானத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது ஏன் என்று ஜீவா கேட்டார்.