செராண்டா தமிழ்ப்பள்ளி எழும்புவதில் என்னதான் பிரச்சினை என்று கமலநாதன் விளக்கிக் கூற வேண்டும். செராண்டா தமிழ்ப்பள்ளி குறித்து கேள்வி எழுப்பினால் பொங்கி எழும் டத்தோ கமலநாதன் அப்பள்ளி  கட்டுமானம் தாமதமாவதற்கு ஒரு காரணமாக இருந்து வருகிறார். இப்பள்ளியின் நிலை குறித்து அவர் விளக்கமளிக்க முன் வர வேண்டும் என்று தேசம் வலைத்தள ஊடகத்திடம் சேவியர் தெரிவித்தார்.

ரவாங், ஏப்ரல்-14
       

   செராண்டா தமிழ்ப்பள்ளியை எழுப்ப முடியாத கமலநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு  தகுதியற்றவர். ஆகையால், கமலநாதன் பதவி விலகத் தயாரா என்று சிலாங்கூர், ஸ்ரீ அண்டலாஸ்  சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் சவால் விடுத்துள்ளார்.


   செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில்  கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன் மௌனம் சாதித்து வருகிறார். இப்பள்ளி கட்டுமானத்தில் என்னதான் பிரச்சினை? மத்திய அரசாங்கத்தில் துணையமைச்சர் பதவி வகித்து வரும் கமலநாதன்  அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்கு

6 ஆண்டுகளாக இழுபறி நிலையைக் கையாண்டு வருகிறார்.

   செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் உண்மையில் கட்டப்படுகிறது என்றால் கட்டுமானம்  தொடங்கும் தேதி, முடிக்கும் தேதி எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தேதிகள் எதுவும் இல்லாமல் அந்த கட்டுமான நிலத்தில் அறிவிப்பு பலகை பதாதை பொருத்தப்பட்டது வட்டார மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


   கடந்த 2012 தொடங்கி செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் இழுபறி நிலையில் உள்ளது. இப்பள்ளிக்கெ அடிக்கல் நாட்டி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பள்ளி கட்டுமானம் எழுந்தபாடில்லை. இந்த 6 ஆண்டுகளில் இந்நேரம் இப்பள்ளியை கட்டி முடித்திருக்கலாம். ஆனால், டத்தோ கமலநாதன்  அலட்சியப் போக்கினால் கட்டுமானம் இன்னும் நடைபெறாமல் உள்ளது. செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பில் டத்தோ கமலநாதன் விளக்கம் சொல்லியே ஆக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


   செராண்டா தமிழ்ப்பள்ளி நிலத்தில் கடந்த 2015இல் டத்தோ கமலநாதன் இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டி கட்டுமானத்தை முடங்கச் செய்து விட்டார். இப்பள்ளி கட்டுமானத்தில் அப்படி என்னதான் பிரச்சினை? கட்டுமானம் நடைபெறுவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள்? என்ன காரணத்தினால் கட்டுமானம் நடைபெறவில்லை? இக்கேள்விகளுக்கு டத்தோ கமலநாதன் பதில் சொல்ல வேண்டும்.


   அதிகாரமிக்க துணையமைச்சர் பதவியில் இருக்கும் கமலநாதன் பள்ளியை கட்ட முடியவில்லை என்றால் அப்பொறுப்பை சிலாங்கூர் மாநில அரசிடம் விட்டுவிடுங்கள். பணத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் ஓராண்டில் பள்ளியை கட்டி முடித்துக் காட்டுகிறோம். இப்பள்ளிக்கு 1 கோடியே 10 லட்சம் வெள்ளி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஈஜோக்கில் 60 லட்சம் வெள்ளி செலவில் கட்டி முடிக்கப் போவதாக செவியர் குறிப்பிட்டுள்ளார்.

வேலைகளை கவனிக்க முடியும். இல்லாத வீட்டுக்கு இதுதான் சாலை, இப்படித்தான் செல்ல வேண்டும், இதுதான் ஜன்னல், இதுதான் கதவு என்று கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் டத்தோ கமலநாதன்  என்று சேவியர் சாடினார்.

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

   செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பில் அவரின் ஆதரவாளர் ஒருவர் ஒரு காணொளியை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். அதில் பள்ளி நிலம் சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் சாலை தயாராகி விட்டதாகவும் விரைவில் பள்ளி கட்டுமானம் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


   ஆனால் அவர் குறிப்பிட்ட பாலம்கூட பாதியிலேயே ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த பாலத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் அமைக்க ப்பட்டுள்ளது என்று செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமான நிலத்தை நேரடியாக பார்வையிட்டபோது சேவியர் ஜெயகுமார் இதனைத் தெரிவித்தார். 
           

   செராண்டா தமிழ்ப்பள்ளி ஏன் கட்டப்படவில்லை என்பதுதான் நமது கேள்வி. முதலில் தமிழ்ப்பள்ளி கட்டுமானம் தொடங்கினால்தான் மற்ற

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

   இந்தத் தமிழ்ப்பள்ளி தாமத்திற்கு உள்நோக்கம் இருக்கிறது. இது டத்தோ கமலதாதனுக்கு மட்டுமே வெளிச்சம். செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் கமலநாதன் வட்டார மக்களை ஏமாற்றி விட்டார். இனியும் அவர் உலுசிலாங்கூர் நாடாளுபன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர். அடுத்த 14ஆவது பொதுத் தேர்தலில் அவர் உலுசிலாங்கூரில் போட்டியிடக்கூடாது என்று சேவியர் ஜெயகுமார் வலியுறுத்தினார்.


   இந்த கட்டுமான நிலத்தில்  தொடக்கம், முடிவு தேதி இல்லாத  பலகை பதாதை பொருத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது ஒரு கண்துடைப்பு வேலையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 For Advertisement : +6-0165214985

செராண்டா தமிழ்ப்பள்ளியை எழுப்ப முடியவில்லை என்றால் பதவி விலகத் தயாரா? கமலநாதனுக்கு சேவியர் ஜெயகுமார்  சவால்...!
( எம்.சித்தார்த் )

 Advertisement :