குண்டாங் புறம்போக்கு நிலத்தில் ஊழலா? இந்தியர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும்!
மலேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் கலைமுகிலன் கோரிக்கை!
( ஆதிரன் )

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்கு அந்த நிலம் வழங்கப்பட வேண்டும் என்று தேசம் வலைத்தள ஊடகத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் கலைமுகிலன் கேட்டுக் கொண்டுள்ளார்..

 For Advertisement : +6-0165214985

   குண்டாங் வட்டாரத்தில் இந்தியர்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். குண்டாங் தோட்டத்தில் பல்லாண்டுகளாக வாழ்ந்த இந்தியர்களுக்கு இந்நிலம் வழங்கப்படவில்லை. மாறாக ஒரு தரப்பினர் நிலத்தை ஊழல் செய்து வருகின்றனர். அவர்கள் புறம்போக்கு நிலத்தை கூறு போட்டு விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளதாக குண்டாங் நிலப்பகுதிக்கு வருகை மேற்கொண்டிருந்த கலைமுகிலன் தெரிவித்தார்.


   குண்டாங் கிராமத்தில் மலாய்க்காரர்கள், சீனர்களுக்கு நிலம் ஒதுக்கித் தரப்பட்டு ள்ளது.  ஆனால், இவ்வட்டாரத்தில் 1970ஆம் ஆண்டு தொடங்கி காலங்காலமாக வாழ்ந்து வரும் கம்போங் பாரு குண்டாங் கிராமத்தைச் சேர்ந்த 100 இந்திய குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கித் தரப்படவில்லை என்பதால் சிலாங்கூர் மாநில அரசு நிலப்பட்டாவுக்கு விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும். கம்போங் பாரு குண்டாங்கில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு ஒரு நிலம்கூடவா வழங்கக் கூடாது? 1970ஆம் ஆண்டு தொடங்கி நிலம் கேட்டு வரும் இவர்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை. ஆகையால் மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் மூலம் கோம்பாக் நில அலுவலகத்திற்கு கடிதம் எழுதப் போவதாக அவர் சொன்னார்.

 Advertisement :

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

ரவாங் ஏப்ரல் - 15


   ரவாங்கில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கம்போங் பாரு குண்டாங் கிராமத்தில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திய குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலைமுகிலன்  வலியுறுத்தியுள்ளார்.


        இந்த கம்போங் பாரு குண்டாங் நிலம் சில தீய சக்திகளால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக நாங்கள் அறிகிறோம். இந்த நில ஊழல் தடுக்கப்பட வேண்டும். இந்த இடத்தில் நீண்ட காலமாக 

   இந்த நில விவகாலம் தொடர்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் நில அலுவலகத்தில் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தார். ஆனால், இதற்கு முறையான விளக்கம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் கிளை குண்டாங்கில் உள்ளது. அதன் தலைவராக இருக்கும் ப.தேவா ஸ்ரீ ராகவன் இவ்விவகாரத்தை எங்கள் பார்வைக்குக் கொண்டு வந்ததால் இதற்கு நாங்கள் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். 


   குண்டாங் வட்டார இந்தியர்களுக்கு புறம்போக்கு நிலம் வழங்கப்பட வேண்டும். இதில் எவ்வித சதிநாச வேலையும் இருக்கக் கூடாது.  யார் யாருக்கோ நிலம் கிடைக்கிறது. ஆனால், ஏழையாக இருக்கும் இவர்களுக்கு இந்நாள் வரையில் நிலம் வழங்கப்படவில்லை என்று கலைமுகிலன் தெரிவித்தார்.


   கம்போங் குண்டாங் பாரு கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்கு நிலம் கிடைக்க வேண்டுகிறேன். இதுகுறித்து கோம்பாக் நில அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவோம்.  அவர்களிடமிருந்து முறையான பதில் இல்லாத பட்சத்தில் போராட்டம் தொடரும். இதற்கு தமிழ் உறவுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கலைமுகிலன் கேட்டுக் கொண்டுள்ளார்.


   கம்போங் பாரு குண்டாங்கில் மற்ற பலருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் காலியாக இருக்கும் நிலத்திற்கு இங்குள்ள 100 இந்திய குடும் பங்கள் நிலப்பட்டாவுக்கு கோம்பாக் நில அலுவலகத்தில் இந்தியர்கள் மனு செய்திருக்கிறார்கள். அது குறித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த பதிலும் தெரியவில்லை. ஆகையால் சிலாங்கூர் மாநில அரசாங்கம் இதுகுறித்து விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று கலைமுகிலன் வலியுறுத்தியுள்ளார்.