ஆரோக்கியம் நிறைந்த மலேசியர் மணவாழ்க்கை நலனை அரசாங்கம் தனிகவனம் கொண்டு உருவாக்கம் வேண்டும்! ஐ.பி.எப் உத்தாமா கட்சியின் தேசியத் தலைவர் 
முவீ.மதியழகன் வேண்டுகோள்!

( மு.வ.கலைமணி )

வாலைச்சித்தரின் ரசமணிகள்

பினாங்கு, ஏப்ரல்-10     


   ஆளும்கட்சிகள் எதிர்க்கட்சிகளென்ற பாரபட்சமின்றி மனிதம் தளைக்க தலைவர்கள் ஒருமித்த குரலாக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பிட வேண்டும் என மு.வீ.மதியழகன் கோரிக்கையை முன்வைத்தார்.
     

நம் நாட்டின் அரசாங்கம் முஸ்லிம் அல்லாதாரு க்கான தனியொரு அமைச்சரவையும் 
தனித்த விசாரணைக்கான நீதிமன்றங்களையும்
அமைத்திட நாடாளுமன்றத்தில்  தீர்மானங்களை முன்மொழிய முன்வர வேண்டும்.
     

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

 For Advertisement : +6-0165214985

   பிற இனங்களை போன்றே மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் அதிகார உரிமைகளை இந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீக நடைமுறைகளை கட்டிக்காத்திடவும் கட்டொழுங்கு மிக்கதொரு தூய சமுதாயத்தை உருவாக்கிடவும்
தனிமையும் சுதந்திரமும் சுயேட்சை விசாரணைகளும் உருவாக்கப்பட சட்டத் திருத்தங்கள்  வேண்டும்.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

 Advertisement :

   நம் நாட்டின் முஸ்லிம்களுக்கென மதம் சார்ந்த வழக்கு விசாரணையும் தண்டனை வழிமுறையையும் ரகசியபடுத்தும், ஷரியா நீதிமன்றம் போன்று, மலேசிய இந்துகளுக்கும் தனித்தனி மதம் சார்ந்த வழக்குகள் விசாரணைகள் வேண்டும்.


   மலேசிய திருநாட்டில் வாழும் இந்தியர்களின் திருமண வைபவங்களில் சடங்கு 
சம்பிரதாயங்களையும் தாண்டி 100-க்கு 90 % சதவிகித திருமண வாழ்க்கை கசந்து மனமுறிவுகளால் தோல்வியில் முடிகிறது, அவை வரிசை கட்டியபடி நீதிமன்ற வாசற்படி தோரும் நீண்ட நெடிய வரிசையில் காத்துக்கிடந்து விவாகரத்து வழக்காடல்
நீதிமன்ற மரபுபடி பொது பலகையில் பார்வைக்கு வைப்பதும்,  பல்லின மக்களது முன்னிலையில் விசாரணைகளை செய்வதுமான நடைமுறை வழக்கங்கள் மாற்றப்பட வேண்டும். 
அவ்வழக்கு விசாரணைகள் பொது நீதிமன்றத்தில் பல்லின மக்கள் மத்தியிலே விசாரிப்பது இக்காலக் கட்டத்தில்  ஏற்புடையதாக இல்லை, அதுபோல மனமுறிவுக்கு முன்னர் நடந்தப்படும் அறிவுரை சந்திப்பும் பலனளித்திடவில்லை. வழக்கை வழிநடத்தும் வழக்கறிஞர்களும் மற்ற மற்ற குற்றவிசாரனைகளை போன்று ஜோடனை செய்வதும், அந்தரங்களை வெளிப்படையாக திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரணை செய்வதும் ஒரு மதம்சார்ந்த இனம்,  அவ்வினத்தை சார்ந்த ஆண் பெண் இருவரை மட்டுமே கொண்டிருக்கவில்லை, அவர்களது குடும்பத்தாரையும்

இணைத்து அவமானம் செய்வதாக கருதப்படுகிறது.


   அதே காரணங்களை முன்னகம் செய்து  மனிதாபிமான 
நோக்குடன் மலேசியர்களின் திருமண வாழ்க்கை  ஆரோக்கியமானதும் மனிதம் வாழும் வாழ்வுக்கு வழிகாட்டியாக நாடும் நாமும் இருந்தாக வேண்டும்.
     

   முஸ்லிம்கள் போன்று திருமண வாழ்வுக்கு முன்னர் அவர்களை மணவாழ்க்கை பயிற்சிக்கு தயார்படுத்தும் நிலைபாடுகள்,  கட்டாய சட்டமாக்கப்பட வேண்டும், அதற்கான ஆக்கப்பணிகளை மஇகாவும், மலேசிய இந்து சங்கமும் இணைந்து ஆராய்வுச் செய்து தனியொரு அமைச்சும் சிறப்பு சட்டங்களும் தனி நீதிமன்றம் உருவாக்கமும் வேண்டுமென இந்திய மக்களின் எதிர்ப்பார்புகளுக்கு ஏதுவாக அமையப்பட வேண்டும் என மதியழகன் வலியுறுத்தினார்.