1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்... ”தேசம்” ஆன்லைன்

அரசியல் தலைவர்கள் வேண்டியவர்களை உதவியாளர்களாக நியமிப்பதை நிறுத்த வேண்டும்!
( குணாளன் மணியம் )

கல்வித் தகுதியைக்கூட பார்க்காமல் சில அரசியல் தலைவர்கள் தங்களின் உதவியாளர்களாக நியமித்துக்  கொள்வதால்தான் மக்கள் தொடர்பு பாதிக்கப்படுகிறது என்று அரசாங்க சார்பற்ற இயக்கத்தை  சேர்ந்த பலர் தேசம் வலைத்தள ஊடகத்திடம் தெரிவித்தனர்.

கோலாலம்பூர், ஏப்ரல் - 24

    
   அரசியல் தலைவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை உதவியாளர்கள் பதவிக்கு நியமித்துக் கொள்வதால்தான் மக்கள் பிரச்சினைகளை கவனிக்க முடியாமல் போகிறது தேசம் மேற்கொ ண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


   ஒரு அரசியல் தலைவருக்கு வேண்டியவர் என்ற காரணத்திற்காக 

   ஒரு அரசியல் தலைவரின் குறிப்பாக இந்திய அரசியல் தலைவரின் பத்திரிகை செயலாளர் தமிழ்மொழி சரளமாக எழுதப்படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அப்போது தான் இந்திய மக்கள் பிரச்சினைகளை முறையாகவும் சரியாகவும் கவனிக்க முடியும். அதேவேளையில் ஊடகங்களுக்கும் சரியான தகவல்களை வழங்க முடியும். ஆனால், நடப்பது என்ன? அரசியல் தலைவர்களின் உதவியாளர்கள் மக்கள் அழைப்புகளுக்கு பதில் சொல்வதில்லை என்று ஒரு இயக்கத் தலைவர்  கூறினார்.

   இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. கிள்ளான் மருத்துவமனையில் திடீர் மரணமடைந்த சிறுமி லாரண்யா விவகாரத்தை இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம். லாரண்யாவின் மரணத்தில் மருத்துவர்களின் அலட்சியம் நிரம்பியுள்ளது என்ற தகவலை தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரின் உதவியாளர்களுக்கு கைப்பேசியில்  பலமுறை அழைக்கப்பட்டும் பதில் இல்லை. அவர்கள் கைப்பேசியில் அழைக்கப்பட்ட எண் கண்டிப்பாக இருந்திருக்கும். ஆனால், இன்றுவரை சம்பந்தப்பட்ட உதவியாளர்கள் லாரண்யா குடும்பத்தாரை திரும்ப அழைக்கவில்லை.


   ஒரு அரசியல் தலைவரின் வேண்டிய உதவியாளர்கள் என்பதால் அவர்கள் செய்த தவறு மறைக்கப்பட்டுள்ளது. இதுவே அரசியல் தலைவருக்கு வேண்டியவராக இல்லாமல் தகுதியுள்ள தனிநபராக இருந்திருந்தால் உதவியாளர் என்ற தங்கள் கடமையை அவர்கள் உணர்வோடு செய்திருப்பார்கள் என்று மற்றொரு இயக்கத் தலைவர் குறிப்பிட்டார்.


   ஒரு ஆட்சிக்குழு உறுப்பினர் தனது உதவியாளர்களை நெருங்கிய நண்பர்களாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் நியமித்துக் கொண்டுள்ளார். இந்திய அரசியல் தலைவரான அவர் இப்படிச் செய்யலாமா?
ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று இருதரப்பி னரும்  இப்படித்தான் இருக்கின்றனர்.


   அரசியல் தலைவர்களின் உதவியாளர்கள் உயர்படிப்பு படித்தவர்களாக இருந்தால் மட்டும் போதாது. மாறாக அவர்கள் மக்களுக்கு முன்னுரிமை வழங்குபவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய உதவியாளர்கள் அனுபவசாலிகளாகவும் திறமை சாலிகளாகவும் இருக்க வேண்டும். ஆனால், கட்சியில் இருப்பவர்களை உதவியாளர்களாக நியமித்துக் கொள்வதால்தான் கடமை முறையாக செய்யப்படுவதில்லை. அரசியல் தலைவரின் பத்திரிகை செயலாளர்  பத்திரிகை துறையில் நீண்ட காலம் வேலை செய்த அனுபவம் உள்ளவராக இருந்தால் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருப்பார். ஆனால், பத்திரிகை துறை வாசமே இல்லாதவர்கள்தான்  உதவியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அது போலவே மற்ற உதவியாளர்கள் பதவியும் கையாளப்படுகின்றன. ஆகையால், அரசியல் தலைவர்கள் இதுகுறித்து சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சமுதாயத்தைச் சேர்ந்த பலர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

   ஒரு அமைச்சர் பத்திரிகை செயலாளர், அத்தரங்கச் செயலாளர், சிறப்பு அதுகாரி, அரசியல் செயலாளர் உள்ளிட்ட 6 உதவியாளர்களை நியமித்துக் கொள்ள முடியும். அதேநேரத்தில் ஒரு துணையமைச்சர் அரசியல் செயலாளர், சிறப்பு அதிகாரி, அந்தரங்கச் செயலாளர் ஆகிய மூவரை நியமித்துக் கொள்ள முடியும். ஒரு மாநிலத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கக் கூடியவர்களும் குறைந்தபட்சம் மூன்று முதல் 6 பேர் வரையில் உதவியாளர்களாக நியமித்துக் கொள்ள முடியும். 

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

MOB : +6-0165214985

   இந்நிலையில் ஒரு தலைவர் அவருக்கு நியமித்துக் கொள்ளும் உதவியாளர்கள் அப்பதவிக்கு தகுதியானவர்தானா என்று ஆராய்வதில்லை. அவர் தனக்கு வேண்டியவராக தேடி பிடித்து உதவியாளராக நியமித்துக் கொள்கிறார். இதனால் மக்கள் தொடர்பு பாதிக்கப்படுகிறது. மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு நேரடியாக அமைச்சர், துணையமைச்சரை நாடினாலும் அவர்கள் உதவியாளர்களிடம்தான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட உதவியாளர்கள் உதவி நாடி வந்த மக்களை அழைக்கழிக்கிறார்கள். இதன் காணமாகவே மக்களுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் மீதும் அரசியல் கட்சிகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 Advertisement :

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

MOB : +91-9500477739