1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

தமிழ்நாடு, திருவண்ணமலையில்

மலேசிய தேசம் பத்திரிகையின் ஊடக விருது விழா!
மலேசிய துணையமைச்சர்
டத்தோ எம்.சரவணன் தலைமையில் இன்று நடைபெறுகிறது!
( செந்தில்குமார் )

திருவண்ணாமலை, மே - 21


   மலேசிய தேசம் பத்திரிகை முதல் முறையாக தமிழ்நாடு, திருவண்ணாம லையில் நடைபெறவுள்ளது. இந்த விருது விழா மலேசிய துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையில் இன்று மே 21 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்ரீநிதி மஹால் மண்டபத்தில் நடைபெற வுள்ளது.


         
இந்திய தேசம் பத்திரிகை கிளை, வாலைச்சித்தர் ஆசிரம அறக்கட்டளை ஏற்பாட்டில் இந்திய தேசம் பத்திரிகை துணை ஆசிரியர் டாக்டர் எல்.சீனிவாசன் 

   இந்த தேசம் விருது விழா நிகழ்வில் தேசம் பவுண்டேசன் அறவாரியத்தை டத்தோ சரவணன் தொங்கி வைக்கிறார். மேலும் இந்திய தேசம் பத்திரிகையின் முதல் பிரதியை ஆரம்பித்து வைப்பதோடு டத்தோ சரவணன் பெயரில் வாலைச்சித்தர் ஆசிரம அறக்கட்டளை தயாரித்துள்ள சாரா ஹெர்பல் டீ, சாரா கானோ காபி, சாரா ஹெர்பல் ஆயில் ஆகிய பொருட்களையும் அறிமுகம் செய்வார்.


       இந்த மலேசிய தேசம் விருது விழாவில் ஸ்ரீ தண்டபாணி ஆசிரம பீடாதிபதி வாலைச்சித்தர் ஐயா, வேளாண் விஞ்ஞானி டாக்டர் வி.பிரகாசம், லயன் எம்.பாலகிருஷ்ணன்,  எஸ்.டெல்லிகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.


         மலேசிய தேசம் பத்திரிகை தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம், தேசம் மீடியா இயக்குநர் சரஸ்வதி பெருமாள் ஆகியோருடன் மலேசியர்கள் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமையில் விருது விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


   இந்த தேசம் விருது விழாவில் கலந்து கொள்வதற்காக துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் இன்று காலை சென்னை வருகிறார். அவருக்கு தேசம் பத்திரிகையின் சார்பில் டாக்டர் எல்.சீனிவாசன் தலைமையில் கோலாகல வரவேற்பு நல்கப்பட உள்ளது.