தேசம் பத்திரிகையை மின்னியல் ஊடகமாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்திய போது தாமாக முன்வந்து தேசம் வலைத்தளத்தை கடந்த 1.1.2017இல் உருவாக்கி 6 மாத காலத்தில் தேசம் வலைத்தள ஊடகத்தை பிரபலமடையச் செய்தார் டாக்டர் எல். சீனிவாசன்.


   தேசம் பத்திரிகைக்கு ஒரு முதுகெலும்பாக இருந்து வரும் டாக்டர் எல். சீனிவாசன் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரும்  அக்டோபர் மாதம் முதல் தேதி தொடங்கி டாக்டர் எல். சீனிவாசன் அவர்களை தேசம் பத்திரிகையின் இயக்குநராக நியமிக்கப்பட விருப்பதாக குணாளன் மணியம் தெரிவித்தார்.

www.valaisiddar.com

மலேசிய ”தேசம்” பத்திரிகையின் இயக்குநராக இந்திய பொறுப்பாளர் டாக்டர் எல். சீனிவாசன் நியமனம் செய்யப்படுவார் !
தேசம் தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் அறிவிப்பு...
 
( அருணகிரி )

www.valaisiddar.com

கோலாலம்பூர், ஆகஸ்டு - 10
       

   மலேசியாவில் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேசம் பத்திரிகையின் இயக்குநராக தேசம் பத்திரிகையின் இந்திய பொறுப்பாளரும் துணை ஆசிரியருமான டாக்டர் எல். சீனிவாசன் நியமிக்க ப்படவிருப்பதாக தேசம் பத்திரிகையின் தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான

குணாளன் மணியம் அறிவித்துள்ளார்.


   கடந்த 31.8.2009இல் தொடங்கப்பட்ட தேசம்

செய்தி  பத்திரிகை கடந்த 8 ஆண்டுகளாக மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தேசம் பத்திரிகையை மின்னியல் ஊடகமாக கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனையில் நாங்கள் இருந்த போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசம் பத்திரிகைக்கு அறிமுகமான டாக்டர் சீனிவாசன் பத்திரிகையின் இந்திய பொறுப்பாளராகவும் துணை ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டதாக குணாளன் மணியம் தெரிவித்தார்.

 Advertisement :

திருவண்ணாமலை
”வாலைச்சித்தரின்”

அற்புத படைப்பு

   உண்மை, உழைப்பு, உயர்வு என்ற நிலையில் செயல்பட்டு தேசம் பத்திரிகையை குறுகிய காலத்தில் ஒரு வலைத்தள ஊடகமாக பிரபலமடையச் செய்த டாக்டர்

எல். சீனிவாசன் திறமையானவர். அவரின் திறமைக்கு தேசம் வழங்கும் அங்கீகாரம்தான் இயக்குநர் பதவி உயர்வு என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார்.

Mobile : +91-9894803009

Phone : +91-4175-227893

   தேசம் வழங்கிய பொறுப்பை மிகவும் கடமை உணர்வுடன் மேற்கொண்ட டாக்டர் சீனிவாசன் குறுகிய காலத்தில் தேசம் பத்திரிகையை தமிழ்நாட்டில் பிரபலமடையச் செய்தார். அதன்பிறகு திருவண்ணாமலையில் கடந்த 21 மே 2017இல் மலேசிய மத்திய அமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையில்ஒரு பிரமாண்டமான தேசம் விருது விழாவை நடத்தி தேசம் பத்திரிகையை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றார். திருவண்ணாமலை தண்டபாணி ஆசிரமம்- மலேசிய தேசம் பத்திரிகையின் ஏற்பட்டில் நடந்த அந்த விருது விழாவில் 100 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 11 மலேசியர்களும் அடங்குவர்.

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்