மலேசியா, ரவாங்கில் ஆதரவற்ற பிள்ளைகளுக்காக சாராதா இல்லத்தை ஆன்மீக வழியில்  நடத்தி பிள்ளைகளை சமய ரீதியில் நெறிப்படுத்தி வருவதோடு  ஆன்மீக வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இளைஞர் குமரன் அவர்களுக்கு தேசம் "ஆன்மீக செம்மல்" விருது (DIVINES DIVINER AWARD) வழங்கி கௌரவிப்பதில் தேசம் பெருமை கொள்கிறது. 

   
   இளைஞர்களுக்கு பல வர்த்தக வாய்ப்புகளை வழங்கி வரும் மலேசியா, பந்திங் எனுமிடத்தைச் சேர்ந்த ரவீந்திரன் அவர்களுக்கு "வர்த்தக வடிவமைப்பாளர்" விருது ( EXCELLENT BISNESS PROVIDER AWARD) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

   தேசம் பத்திரிகை நாடு கடந்து முதல் முறையாக  தேசம் நடத்திய  விருது விழாவில் தேர்வு செய்யப்பட்ட 11 மலேசிய சாதனையாளர்களுக்கு தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தள ஊடகத்தின் தோற்றுநர், தலைமையாசிரியர் குணாளன் மணியம், தேசம் பத்திரிகையின் இந்திய  தலைமை பொறுப்பாளர்  டாக்டர் எல்.சீனிவாசன் மற்றும் கோவை வேளாண்விஞ்ஞானி டாக்டர் வே.பிரகாசம் முன்னிலையில் மலேசிய இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

மலேசிய சாதனையாளர்கள்

11 பேருக்கு சாதனையாளர்கள் விருது!  

செவாலியர் டாக்டர்

டத்தோஸ்ரீ குப்புசாமி, கோபால் இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது... !
( டெல்லி குமார் )

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

   மலேசியா, ரவாங் எனுமிடத்தில் ஒரு இளைஞராக இருந்து கொண்டு கல்லூரி, அரசியல், பொது இயக்கம் என்று பல துறைகளில் சேவையாற்றி வரும் கணபதிராவ் கோபால் அவர்களுக்கு "இளைஞர் சேவையாளர்"விருது (BEST YOUTH SERVANT AWARD) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.


   மலேசியா, ஷா ஆலமில் இருந்து சென்னைக்கு சென்று பல திரைப்படங்களில் ராப் பாடல்கள் பாடியதோடு அண்மையில் "விவசாயம்" எனும் ஆல்பத்தை தயாரித்து இன்று ஒரு திரைப்படம் தயாரிக்கும் அளவிற்கு வெற்றி கண்டுள்ள எம்சி ரிக்கோவுக்கு "கலைவேந்தன்" விருது (EXCELLENT ENTERTAINMENT AWARD) விருது வழங்கி தேசம் மகிழ்ந்துள்ளது.
   

மலேசியாவில் எம்.ஜி.ஆர் கொள்கைகளை பரப்ப வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர் வேடமிட்டு அவரது பாடல்களுக்கு அபிநயம் பிடித்து வரும் எம்.ஜி.ஆர் தேவன் அவர்களுக்கு "கலைச்செம்மல்" விருது (CULTURE LEGEND AWARD) வழங்கி தேசம் பெருமை கொண்டுள்ளது.
          மலேசிய பத்திரிகை துறையில் ஒரு நிருபராக இருந்து பல சாதனைகள் படைத்துள்ள பினாங்கு பத்திரிகையாளர் கலைமணிக்கு "சிறந்த நிருபர்"விருது (BEST TAMIL REPORTER) வழங்கப்பட்டது.

   வாழ்க்கையில் ஒருவரிடம் கைகட்டி வேலை செய்து, பல துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து இன்று மலேசியா, கிள்ளானில் மூன்று கல்லூரிகளுக்கு  உரிமையாளராகி இளைஞர்களுக்கு அரசாங்க உதவியில்  தொழில்திறன் பயிற்சி வழங்கி ஒரு சாதனையாளராக திகழும் ஐயப்பன் முனியாண்டிக்கு "மாணவர் சமுதாய காவலர்" விருது (EXCELLENT PROFESSIONAL INSTRUCTOR AWARD) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.


   கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்துள்ள  மலேசியா, கோலாலம்பூர், செலாயாங் எனுமிடத்தைச் சேர்ந்த டத்தோ ரவீன் அவர்களுக்கு "சிறந்த கல்வியாளர்" விருது (EXCELLENT EDUCATOR AWARD) வழங்கப்பட்டுள்ளது.

   ரவாங் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆலயத்தின் தலைவரும் செலாயாங் தொகுதி மஇகா உதவித் தலைவருமான திரு.கோபால் அவர்களுக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது (LIFE TIME ACHIEVEMENT AWARD) வழங்கி கௌரவிக்கப்பட்டது.


   "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும்" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பிரச்சினை காரணமாக 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி நடுரோட்டில் படுத்துறங்கி விடா முயற்சி, தன்னம்பிக்கையோடு போராட்டம் நடத்தி இன்று ஒரு இளம் தொழிலதிபராக, ஒரு சாதனையாளராக, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் கெடா, சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த ஷாஹாபுடின் ஒஸ்மான் அவர்களுக்கு தேசம் பத்திரிகை "சிறந்த இளைஞர்" விருது (EXCELLENT YOUTH) வழங்கி கௌரவிக்கப்பட்டார்..

திருவண்ணாமலை, மே - 26


 மலேசிய தேசம் பத்திரிகையின் விருது விழா இந்திய தேசம் பத்திரிகை கிளையின் ஏற்பாட்டில் கடந்த மே 21ஆம் தேதி மலேசிய இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இந்த விருது விழாவில் மலேசிய சாதனையாளர்கள் 11 பேருக்கு சாதனை விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஊத்தாங் மெலிந்தாங் தொழிலதிபர் செவாலியர் சார் டத்தோஸ்ரீ டாக்டர் குப்புசாமி அவர்களுக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி விட்ட டாக்டர் குப்புசாமி சின்ன வயது தொடங்கியே மற்றவர்களுக்கு உதவு வழங்கும் மனப்பான்மைக் கொண்டவர். இன்றளவும் மக்களுக்கு சமுதாய தொண்டாற்றி்வரும் டத்தோஸ்ரீ டாக்டர் குப்புசாமி அவர்களுக்கு தேசம் ஊடகம் "வாழ்நாள் சாதனையாளர்" விருது (LIFE TIME ACHIEVEMENT AWARD) வழங்கி கௌரவித்தது.