1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

கோலாலம்பூர், ஜூன் - 31


   தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழாவில் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், இயக்குநர் சுந்தர் சி, நடிகர் விச்சு விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருப்பதாக  தேசம் பத்திரிகை- தேசம் வலைத்தள ஊடகத்தின் தலைமை ஆசிரியர், தோற்றுநர் குணாளன் மணியம் தெரிவித்தார்.  

"Sowmyan"

​Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu. India.

   இந்நிலையில் இதுபோன்ற மற்றொரு பிரமாண்ட மலேசிய தேசம் ஊடக விருது விழா மலேசியா, கோலாலம்பூரில் செப்டம்பர் 30இல் நடைபெறவுள்ளது.  இந்த தேசம் ஊடக விருது விழாவை முன்னிட்டு சென்னைக்கு சென்றிருந்த தேசம் தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் சில பிரமுகர்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கியிருந்தார். இதில் நடிகர் விஷால் அவர்களை சந்தித்து தேசம் விருது விழா அழைப்பு வழங்கப்பட்டது. அவருக்கு குணாளன் மணியம் விழா குறித்து விளக்கம ளித்தார். தேசம் விருது  விழாவில் கலந்து கொள்ள கலந்து கொள்ள இணக்கம் தெரிவித்தார். இதில் மேலும் சுந்தர் சியின் சிறப்பு மேலாளர் அன்புவிடம் அழைப்பிதழ் வழங்ப்பட்டது. படப்பிடிப்பு காரணமாக ஹைதராபாத் சென்றுள்ள சுந்தர் சியின் சார்பில் அன்பு அழைப்பு அட்டையைப் பெற்றுக் கொண்டார். அது போலவே ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நாசர் அழைப்பு அட்டையை திரைப்பட  இயக்குநர்

எஸ்.பி. செல்வம் பெற்றுக் கொண்டுள்ளார்.


   

 Advertisement :

மேலும்  அதிகமான பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக ஊடகச் செய்தியில் குணாளன் மணியம் குறிப்பிட்டுள்ளார்.

www.valaisiddar.com

இந்த தேசம் விருது விழாவில் கலந்து கொள்வதோடு பரதநாட்டியம் வழங்கவிருக்கும் சென்னை சிவானந்த கலாலயம் நடனப் பள்ளி தோற்றுநர்,  தலைவர் லட்சுமி கணேஷ் அவர்களிடமும் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.    
 
   இந்த தேசம் சாதனையாளர்கள் விருது விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள, படைத்து வரும் மலேசிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதனையாளர்கள் சிலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.  

   இந்த விருது விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி, சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

   இந்த தேசம் ஊடக விருது விழாவில் கலந்து கொள்ளும்படி தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் மலர், தாய் மொழி ஆகிய தமிழ்ப்பத்திரிகை உரிமையா ளர்கள், தலைமை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்படும். மேலும் பிறமொழி பத்திரிகையைச் சேர்ந்த இந்திய ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு நேரடியாக வழங்கப்படும் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.  

   இந்த தேசம் ஊடக விருது விழாவில் மொத்தம் 50 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் பத்திரிகை, கலை, விளையாட்டு, வர்த்தகம், அரசியல், இயக்கம், ஆன்மீகம், தமிழ்ப்பள்ளி, பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு தேசம் விருதுகள் வழங்கி கௌரவிக்கும். இந்த தேசம் ஊடக விருது விழாவில் முத்தாய்ப்பாக 10 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்  வழங்கி கௌரவிக்கப்படும் என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார்.

   இந்த தேசம் ஊடக விருது விழா ஆண்டுதோறும் மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் நடைபெறும். இந்த தேசம் ஊடக விருது விழாவில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் கீழ்க்காணும் கைப்பேசி எண்ணுக்கு அழைத்து முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த தேசம் ஊடக விருது விழாவிற்கு ஆதரவு (SPONCER) வழங்கவிரும்புகிறவர்களும் கீழ்க்காணும் தொலைப்பேசி எண்களோடு தொடர் கொள்ளலாம் என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார்.

தொடர்புக்கு - 016-251 7760, 016-521 4985.
மின்னஞ்சல்: desamnewspaper@gmail.com   இணையதளம்-www.desammedia.com

தேசம் சாதனையாளர்கள் விருது விழா எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஷா ஆலம் மிட்லண்டஸ் மாநாட்டு மையத்தில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் 

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

   மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தள ஊடகம் முதல் முறையாக தமிழ்நாடு, திருவண்ணாமலையில் தேசம் ஊடக விருது விழாவை இந்திய தேசம் பத்திரிகை ஆசிரியர் டாக்டர் எல்.சீனிவாசன் ஏற்பாட்டில், மலேசிய இளைஞர், விளையாட்டு த் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையில் கடந்த மே 21ஆம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.


   இந்த இந்திய தேசம் ஊடக விருது விழாவில் 10 மலேசியர்களுக்கும் 100 இந்தியர்களு க்கும் மொத்தம் 120 பேருக்கு பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டன. டத்தோ எம்.சரவணன் அனைவருக்கும் விருதுகளை எடுத்து வழங்கி கௌரவித்ததாக குணாளன் மணியம் தெரிவித்தார்.

Mobile : +91-9894803009

Phone : +91-4175-227893

www.valaisiddar.com

   இந்த தேசம் ஊடக விருது விழாவில் கலந்து கொள்ளும்படி ஆசிரியர் குணாளன் நடிகர் விஷால், நாசர், சுந்தர் சி ஆகியோருக்கு நேரடியாக அழைப்பு வழங்கியிருந்த தைத் தொடர்ந்து அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாக குணாளன் மணியம் சொன்னார்.

டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், டத்தோ சரவணன் தலைமையில் தேசம் சாதனையாளர்கள் விருது விழா !
விஷால், நாசர், சுந்தர் சி சிறப்பு வருகை ! தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் தகவல்...
( அருணகிரி )

திருவண்ணாமலை
”வாலைச்சித்தரின்”

அற்புத படைப்பு