கோலாலம்பூர்,  செப்டம்பர் - 7


   தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழாவில் பிரபல நடிகர் பிக் போஸ் பரணி, அபி சரவணன், வீச்சு விஸ்வநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருப்பதாக  தேசம் பத்திரிகை- தேசம் வலைத்தள ஊடகத்தின் தலைமை ஆசிரியர், தோற்றுநர் குணாளன் மணியம் தெரிவித்தார்.


       தேசம் சாதனையாளர்கள் விருது விழா எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஷா ஆலம் டிஎஸ்ஆர் மாநாட்டு மையத்தில்
மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தேசம் பத்திரிகையின் அழைப்பின் பேரில் மேற்கண்ட சினிமா கலைஞர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக குணாளன் மணியம் தெரிவித்தார். 

தேசம் சாதனையாளர்கள் விருது விழா !
பிக் போஸ் பரணி, அபி சரவணன், விச்சு விஸ்வநாத் பங்கேற்கிறார்கள் ! ( அருணகிரி )

   மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தள

ஊடகம் முதல் முறையாக நடத்தும் விருது விழா மலேசிய சாதனையாளர்களுக்கு

ஒரு மைல்கல்லாக அமையும் என்று குணாளன் மணியம் நம்பிக்கை தெரிவித்தார்.
   

   இந்த தேசம் ஊடக விருது விழா வெற்றி பெறுவதற்கு பலரும் ஆதரவு வழங்கி வருகிறார்கள். இந்த விருது விழாவில் மலேசிய, இந்திய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். அதேவேளையில் மலேசியாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும் என்று குணாளன் மணியம் சொன்னார். இந்த விருது விழாவிற்கு ஆதரவாளர்கள் (SPONCERS) வரவேற்கப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் தொலைப்பேசி எண்களோடு தொடர் கொள்ளலாம் என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார்.


தொடர்புக்கு - 016-251 7760
மின்னஞ்சல்- desamnewspaper@gmail.com

இணையதளம் - www.desammedia.com

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

 Advertisement :