தந்தையின் பாணியில் அவர் இருக்கும் காலத்திலேயே கடந்த 5.2.1990 இல் மலேசிய நண்பன் பத்திரிகையில் அப்போதைய தலைமை ஆசிரியர்  இளையதமிழவேள் ஆதிகுமணன் தலைமையில் இணைந்துள்ளார் குணாளன் மணியம். தமிழ்ப் பத்திரிகை துறையில் ஆர்வத்தில் வந்தவர் என்று கூறுவதைவிட ஒரு வெறியில் வந்தவர் குணாளன் மணியம் என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். அப்போது தொடங்கிய இவரது பத்திரிகை பயணம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    மலேசிய நண்பன் பத்திரிகையில் ஒரு நிருபராக பணியைத் தொடங்கிய 

ஐந்து ஆண்டுகளில் துணை ஆசிரியர் நிலைக்கு உயர்ந்துள்ளார். தற்போது தேசம் பத்திரிகையின் தோற்றுநராகவும் தலைமை ஆசிரியராகவும் இருந்து வருகிறார். மலேசிய நண்பன் பத்திரிகைக்கு வருவதற்கு முன்பு  தினமுரசு  என்ற பத்திரிகையில் சில மாதங்கள் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. மலேசிய நண்பன் பத்திரிகையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள்  பணியாற்றியுள்ள குணாளன் மணியம் இந்த காலகட்டத்தில் பல சிறந்த தமிழ்ப்பத்திரிகையாளர் என்ற அங்ககீகார விருதுகளை பெற்றுள்ளார்.

குணாளன் மணியம்

மலேசிய பிரதமர் நஜிப் அவர்களிடமிருந்து விருது பெறுகிறார்.

மலேசிய அரசியல் தலைவர்கள், இயக்கத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், ம இ கா தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், கலைஞர்கள் என்று பலரின் அன்பைப் பெற்றுள்ள குணாளன் மணியம் கடந்த 31.09.2009இல் தேசம் வார பத்திரிகையை தொடங்கினார். தேசம் பத்திரிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்த செப்டம்பர் 2016இல் அப்பத்திரிகையை மாதம் இருமுறை என்று மாற்றி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

  எங்களைப் பற்றிய அறிமுகம்

   இதன்வழி அதிகமான செய்தி கட்டுரைகளையும் வெளியிட்டு மக்கள் மனம் கவர்ந்துள்ளார். தேசம் தற்போது நாடு தழுவிய நிலையில் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தளத்தில் தேசம் செய்தி அலைவரிசை என்ற தேசம் ஆன்லைன் சேனல்  தமிழ்நாட்டின் பிரபல திருவண்ணாமலை ஸ்ரீ தண்டபாணி ஆசிரமத்தின் செயலாளரும், வாலைச்சித்தர் ஆன்மிக பேரவையின் பொதுச்செயலாளரும், ஜீபிடர் எக்ஸ்போர்ட் நிர்வாக இயக்குனருமான ”ஜோதிட ரத்னா” ”ஆன்மிக செம்மல்”    டாக்டர். எல்.சீனிவாசன் அவர்களின்  ஒத்துழைப்பில் தொடங்கியுள்ளார். இதன்வழி ”தேசம்” உலக அரங்கில் இணையம் வழி கால்பதித்துள்ளது. மலேசியத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் இணையத்தள அலைவரிசையை தொடங்கிய முதல் பத்திரிகை தேசம் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கலைத்துறையில் ஆர்வம் கொண்டுள்ள குணாளன் மணியம் மலேசிய கலைத்துறை மேம்பாட்டிற்கு தனது எழுத்துப் படிவங்கள் மூலம் முக்கியப் பங்காற்றியுள்ளார். இதற்காக மலாய் இசைத்துறையான செனிமான் எனும் அமைப்பு இவருக்கு சிறந்த கலைத்துறை ஆசிரியர் என்ற அங்கீகார விருதை வழங்கியது. மேலும் பல அமைப்புகள் இவருக்கு அங்கீகார  பல விருதுகளை வழங்கியுள்ளன.

டாக்டர். எல்.சீனிவாசன் 

   

     


     கடந்த 1998இல் முதல்
சிறந்த தமிழ்ப்பத்திரிகையாளர் என்ற அங்கீகார விருதை அப்போதைய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடமிருந்து பெற்றிருந்தார். 1999இல் அப்போதைய பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமதுவிடம் (துன் மகாதீர்) பெற்றுள்ளார். இந்நிலையில் 2000, 2001, 2002, 2003 என்று தொடர்ச்சியாக சிறந்த தமிழ்ப் பத்திரிகையாளர் என்ற அங்கீகார விருதுகளை பிரதமரிடம் இருந்து பெற்றிருக்கிறார். இந்நிலையில் மகாதீருக்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்றிருந்த டத்தோ ஸ்ரீ அப்துல்லா படாவி, துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுவா சொய் லெக் உள்ளிட்ட அமைச்சர்கள், துணையமைச்சர்கள் என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.
      

மே - 21, 2017 அன்று ”தேசம்” பத்திரிக்கையின்  துணையாசிரியரும், இயக்குனரும், இந்திய தலைமை பொறுப்பாளருமான  டாக்டர் எல்.சீனிவாசன் அவர்களுக்கு மலேசிய இளைஞர், விளையாட்டு துணை அமைச்சரும், மலேசிய  ”நாம்”  அறவாரியத்தின்  தலைவருமான மாண்புமிகு டத்தோ எம்.சரவணன்

அவர்கள் மலேசிய  ”நாம்”  அறவாரியத்தின் சார்பில்  "சௌம்யன்"    என்ற விருது வழங்கி கௌரவித்தார் ! 

மணியம் சுந்தரராஜ்

​​​நிறுவனர் மற்றும் நிர்வாக ஆசிரியர்

திரு. குணாளன் மணியம் அவர்களைப் பற்றி:


     கடந்த 5.2.1990 இல் பத்திரிகை துறையில் காலடி எடுத்து வைத்த குணாளன் மணியம் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கியவர். பத்திரிகை துறையில் ஒரு நிருபராக வர வேண்டும் என்ற லட்சியத்தில் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவர். குணாளன் அவர்களுக்கு அவரது தந்தை திரு.மணியம் சுந்தரராஜ் ஒரு முன்னோடியாக இருந்துள்ளார். இவர் மலேசிய மண்ணில் ஒரு எழுத்தாளராகவும், பாடகராகவும், ஒரு கலைஞராகவும் வலம் வந்தவர். எனினும் கலைத்துறையில் பணிகள் காரணமாக முழுமையாக ஈடுபட முடியாத நிலையில் எழுத்துத் துறையில் மிகவும் ஆர்வத்துடன் இருந்துள்ளார். இவரது பல சிறுகதைகள் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

      

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் அவர்களிடமிருந்து விருது பெறுகிறார்.