Please Touch Play Button For 

Tamil News In Voice

2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்

சுகாதார அமைச்சிற்கு 26.5 பில்லியன் ரிங்கிட் ஓதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சர்

டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார். 

​- (எஸ்.இளவரசன்)

கோலாலம்பூர். அக்டோபர் - 28.


    மலேசிய சுகாதார அமைச்சரான டத்தோ ஸ்ரீ டாக்டர். எஸ்.சுப்பிரமணியம் நேற்று

பிரதமர் வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் அவர் தெரிவித்தது, சுகாதார அமைச்சில் பல வசதிகளை மேம்படுத்து

வதற்க்கு அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் வேளையில், சில முக்கியமான திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசு தயாராக உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம்

இவ்வாறு கூறினார். 

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

 Advertisement :

   மேலும் நேற்று இந்த 2018 ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தை நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சியில் ஓளிபரப்ப பட்டது. அதனை நாட்டில் உள்ள அனைத்து மூவின

மக்களும் ஆங்காங்கே பேரங்காடி கடைகளில் உள்ள வண்ண தொலைக்காட்சியில் மலேசிய நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள்  நாடாளுமன்றத்தில்

நேற்று தாக்கல் செய்து உரையாற்றிய காணொளியை  நேரடியாக கண்டு பொது

மக்கள் மகிழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

   மேலும் உடல் சம்மந்தமான இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, நீரிழிவு நோய்

ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அனைத்தும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழ்மையான வசதி குறைந்தவர்களுக்கு இந்த புதிய திட்டம்

நன்மை அளிக்ககூடியதாக அமையும் என அவர் விளக்கமளித்தார்.

   அதனை தொடர்ந்து அவர் கூறியது, இந்திய சமுதாயத்திற்காக மலேசிய நாட்டில்

உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 கோடி வெள்ளியும் தெக்குன் கடனுதவிக்கு 5 கோடி

வெள்ளியும் அமானா சாஹாம் வாயிலாக 1.5 பில்லியன் வெள்ளியும் இந்த 2018 வரவு

செலவு திட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மலேசிய

ம.இ.கா தேசிய தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் செய்தியாளரின் கூட்டத்தில் தெரிவித்தார். இந்திய சமூக பெருந்தி ட்டத்தின் வாயிலாகவும் நம் சமுதாயத்திற்க்கு அரசாங்கம் பல நல்ல திட்டங்களை

கொண்டு வரப் போகிறது.எனவே இந்த வாய்ப்புகளை நம் இந்திய சமுதாயம் நல்ல முறையில் பயன் படுத்தி கொண்டு நன்மையடைய வேண்டும் என அவர் கேட்டுக்கொ ண்டார்.