இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர்

கே.ஏ. செங்கோட்டையன், மலேசியக் கல்வித் துணையமைச்சர் டத்தோ

பி. கமலநாதன்,  மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி, ம இ கா உதவித்

தலைவர் டத்தோ டி. மோகன், உட்பட தலைமை ஆசிரியர்கள்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள்,அரசு அதிகாரிகள் என பலர்

நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர்.

   இந்நிகழ்வில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்ப

ட்டன. பாலர் பள்ளி ஆசிரியர் திலகம் விருது, தேசியப் பள்ளி ஆசிரியர் திலகம் விருது,

தமிழ்ப் பள்ளி ஆசிரியர் திலகம் விருது, இடைநிலைப் பள்ளி ஆசிரியர் திலகம் விருது, இணைப்பாட நடவடிக்கை ஆசிரியர் திலகம் விருது, புத்தாக்க ஆசிரியர் திலகம் விருது, தமிழாசிரியர் திலகம் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, தலைமை பண்பாளர்

விருது என பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

   தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றியபோது, இந்தியா

விற்க்கு அப்பாற்பட்ட  நிலையில் மலேசியாவில் தமிழ் பள்ளிகளின் அரசாங்கத்தின் ஆதரவோடு இயங்குவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும்,இந் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளி களுக்கும், தமிழர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதா

கவும் தமிழ் நாட்டின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.  

மலேசியாவில் தேசிய தமிழாசிரியர் திலகம் 2017 விருதளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. - (எஸ்.இளவரசன்)

வாழ்த்துகளுடன்...

ரவாங் சமூக நல இயக்கம்

Please Click Here

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

முந்தைய செய்திகள் : -

செய்திகளை காண,

படிக்க படத்தின் மேல்

தொடவும் 

   250 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து

மலேசியாவுக்குப் புலம் பெயர்ந்த நம்மவர்கள்,

பல்வேறு சவால்களுக்கு இடையே இந்நாட்டில் 

தமிழ்மொழி தொடர்ந்து நிலைத்திருக்க அர்பணவு

ணர்வோடு கடுமையாக உழைப்பவர்கள் தமிழாசிரி

யர்கள். மலேசியாவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக

தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளிகள் இவை

அனைத்தும் சிறந்தோங்க ஆணிவேராக இருப்பவ

ர்கள் தமிழாசிரியர்கள் என டத்தோஸ்ரீ டாக்டர்

எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

முந்தைய செய்திகள் : -

செய்திகளை காண,

படிக்க படத்தின் மேல்

தொடவும் 

   மேலும் மலேசியாவைப் பொறுத்தமட்டில் தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்விக்கூடங்கள் மட்டுமல்ல. அவை, நமது மொழி, கலை, கலாசார  பண்பாட்டை,சமூக ஒழுக்கத்தை வளர்க்கும் மையங்களாகவும் செயல்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.அதனை தொடர்ந்து அவர் கூறியது ஒன்றும் அறியாத நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களை கல்விப் போதிப்பின் மூலம் முழுமையான மனிதர்களாக உருவாக்குகின்றவ ர்கள் ஆசிரியர்கள் மட்டுமே , மாணவர்களுக்கு எது சரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது என எல்லா நடவடிக்கைகளிலும் சரியான ஒன்றை தேர்வு செய்யும் அறிவையும், ஆற்றலையும் வழங்குபவர்களும்  தமிழாசிரியர்கள் என கூறியது குறிப்பிடதக்கது.  

​​முக்கிய அறிவிப்பு :
”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள்  மற்றும் விளம்பரங்களை
வெளியிட வாட்ஸ்ஆப் எண் +91-9500477739 –ஐ தொடர்பு கொள்ளலாம்..

 Advertisement :

கோலாலம்பூர். நவம்பர்.4.(எஸ்.இளவரசன்)

   மலேசிய நாட்டில் தமிழ் கற்பவர்கள் இருக்கும்

வரை தமிழ்க் கல்வி மேலோங்கி இருக்கும், தமிழ்ப் பத்திரிகைகள்,மற்றும் தமிழ் வானொலி இவை

அனைத்தும் இருக்கும்.  அதை முடிவு செய்கின்ற

வர்கள் நாமாகத்தான் இருக்க வேண்டும். நமது நிலை  வலுப்பெறும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ

டாக்டர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்நிக

ழ்வு கோலாலம்பூர், புஸ்பானித்தா இல்லத்திலுள்ள

டாக்டர் சித்தி ஹம்சா மண்டபத்தில் தேசியத் தமிழா

சிரியர் திலகம் 2017 விருதளிப்பு நிகழ்வு கோலாலக

லமாக நடைபெற்றது.இன் நிகழ்வினை அதிகாரப்பூ

ர்வமாகத் தொடக்கி வைத்தப்போது அமைச்சர்

இவ்வாறு கூறினார்.