Please Click Here :

Dr.L.Srinivasan

Chief Editor / 

​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : -

​+91-9500477739

மாற்றுத்திறனாளிகளுடன் பொங்கலை கொண்டாடிய

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்... ( பா.சாய்செந்தில் )

P.Senthilkumaran

Sub Editor / 

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-

​+91-9944677190

  This Page Sponsored By :

திருவண்ணாமலை, ஜனவரி - 13


    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் எதிரில் சிறப்பு பள்ளிகளுக்கான

கிராமிய பொங்கல் விழா போட்டியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேற்று

தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற சிறப்பு பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி

னார்.  இவ்விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பா.ஜான்சி,

மாவட்ட சமூக நல அலுவலர் கிரிஸ்டீனா தா. டார்த்தி, துணை ஆட்சியர் (பயிற்சி)

து.சுரேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.முத்தமிழ்ச்செல்வன், மற்றும்

சிறப்பு பள்ளி இயக்குநர்கள், தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், சிறப்பு

ஆசிரியர்கள்  மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

   இதில் சம்மந்தனூர் இரங்கம்மாள் நிளைவு காதுகேளாதோர்கான சிறப்பு பள்ளி,

இரங்கம்மாள் மனவளர்ச்சி குன்றியோர்க்கான பகல் நேர பராமரிப்பு மையம், சூசை

நகர் அமலராக்கினி பார்வையற்றோர்கான சிறப்பு பள்ளி, தண்டராம்பட்டு லைப்லைன்

மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி, திருவண்ணாமலை லைச்டு லைன்

மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி, ஜமுனாமரத்தூர் சினே ஜோதி மன

வளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி, அஸ்வநாகசுரணை லிட்டில் ஹார்ட்ஸ்

மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான இல்லம், களம்பூர் பேன்யன் மனவளர்ச்சி

குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி, ஆரணி விக்காஸ் ஜீவன் பகல் நேர பராமரிப்பு

மையம், கொண்டம்காரியந்தல் மழலை மனவளர்ச்சி குன்றியோர்க்கான பகல் நேர

பராமரிப்பு  மையம், சேத்துப்பட்டு ரீட்ஸ் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு

பள்ளி, ஆகிய  11 சிறப்பு பள்ளிகள் கிராமிய பொங்கல் விழா போட்டியில் கலந்து

கொண்டனர்.


   இந்த கிராமிய பொங்கல் போட்டியில் கலந்து கொண்ட சிறப்பு பள்ளிகள் வெளிப்படு

த்திய கலை, பண்பாடு, கோலம், படைப்பாற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு

பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு சம்மந்தனூர் இரங்கம்மாள் நினைவு காதுகேளா

தார்கான சிறப்பு பள்ளிக்கும், இரண்டாம் பரிசு சம்மந்தனூர் இரங்கம்மான் மனவளர்ச்சி

குன்றியோர்க்கான பகல் நேர பராமரிப்பு மையம் மற்றும் சூசை நகர் அமலராக்கினி

பார்வையற்றோர்க்கான சிறப்பு பள்ளிகளுக்கும், மூன்றாம் பரிசு களம்பூர் பேன்யன்

மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளிக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களால்

வழங்கப்பட்டது.


   மேலும், கலந்து கொண்ட அனைத்து சிறப்பு பள்ளிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்க

ப்பட்டது. இந்த கிராமிய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

மாடுகளுக்கு பொங்கல், காய்கறிகள் மற்றும் பழங்கள் வழங்கினார். மேலும், போட்டி

யில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளிகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய

த்தை வெளிக்காட்டும் வகையில் மண் பாணையில் பொங்கலிட்டு, கண்கள் கவரும்

வண்ணமயமான கோலங்கள் வரைந்து, வாழை இலையில் கரும்புகள், காய்கறிகள்,

பழங்கள் வைத்து படையலிட்டு சிறப்பான முறையில் கிராமிய பொங்கல் விழாவினை

மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து கொண்டாடினர்.