இந்தியாவிற்கு அடுத்ததாக மலேசியாவில்தான் தமிழர்

மொழி ,கலை, பண்பாண்பாடு ஆகிய உணர்வோடு

வாழ்கிறோம். - டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம்.

( எஸ்.இளவரசன் )

   டான்ஸ்ரீ எஸ். சுப்பிரமணியம் சொற்போர்  போட்டியில் முதல் இடத்தை சங்கத் தமிழ் குழுவினர் பெற்றனர். இவர்களுக்குப் பத்தாயிரம் ரிங்கிட் பரிசாக வழங்கப்பட்டது.

   இதர நாடுகளில் வாழும் சில தமிழர்கள்

போல நாம் என்று நமது அரசியல் பலத்தை இழக்கின்றோமோ அல்லது பலவீனப்படு

த்தப் படுகின்றோமோ அவர்களைப் போல

நமது நிலையும் கேள்விக் குறியாகிவிடும்

என சுகாதார அமைச்சருமான அவர்

எச்சரித்தார்.

   இன்று, கோலாலம்பூர், ம இ கா தலைமை

யக நேதாஜி மண்டபத்தில் டான்ஸ்ரீ

எஸ். சுப்பிரமணியம் சொற்போர் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்குப்

பரிசுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அமைச்சர் இவ்வாறு

தெரிவித்தார்.

ரவாங் சமூக நல இயக்கம்

 Advertisement :

கோலாலம்பூர், அக்டோபர் - 31

   இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் வாழ்கின்றனர்.

ஆனால் மலேசியாவில்தான் நாம் இன்றும் தமிழர்  மொழி, கலை, பண்பாடு ஆகிய உணர்வோடு வாழ்கின்றோம். அதற்கு அரசியல் பலம் முக்கியக் காரணமாகும் என

ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

   ஓர் இனத்தின் அடையாளம் அவர்களது மொழி, கலை, பண்பாடு ஆகியவையாகும்.

எனவே அவற்றை தற்காக்க இன்றைய தலைமுறையினர் முன்வர வேண்டும் என

டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். 

   பண்பாடு எனப்படுவது அகம் - புறம் சார்ந்ததாகும். அகம் பேணிக் காக்கப்படாததால்

தான் இன்று தமிழர்களில் பலர் சமூகச் சீர்கேடுகளில் சிக்கி சிறையில் உள்ளனர்.

குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனவே, அகத்தை பக்குவப்ப

டுத்தும் நடவடிக்கைகளில் நம்மவர்கள் அதிகம் ஈடுபட வேண்டும் என டத்தோஸ்ரீ

சுப்பிரமணியம் தெளிவுப்படுத்தினார்.

Please Click Here

   இந்நிகழ்விழ்வில், பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி,

இளைஞர் விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், செடிக் தலைமை

இயக்குனர் பேராசிரியர் முனைவர் என். எஸ். இராஜேந்திரன், டான்ஸ்ரீ

எஸ். சுப்பிரமணியத்தின் துணைவியார் புவான்ஸ்ரீ தீனா என பலர் திரளாக கலந்து

சிறப்பித்தனர்.

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India